தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாயாற்றில் நில அளவையிலாளர்கள் விரட்டியடிப்பு..

முல்லைதீவின் நாயாற்றில் சத்தம் சந்தடியின்றி இன்றைய தினம் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்க ஏதுவாக அளவீட்டிற்கு சென்றிருந்த நில அளவையிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் விகாரைக்கான காணிகளை அளவீடு செய்யசென்றவர்களே இன்று மீண்டும் மக்களால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித அறிவிப்புமின்றி வருகை தந்து அளவீட்டில் ஈடுபட்ட நிலஅளவையாளர்களே அங்கு திரண்ட பிரதிநிதிகளால்  விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அரச பணிகளை தடுப்பதாக நிலஅளவையாளர்கள் கருத்து வெளியிட மக்களை சீற்றங்கொள்கின்ற காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைவிடாவிடின் மோசமான பின்விளைவுகள் ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...