Designed by Iniyas LTD
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தில் புத்தர் சிலையும் மதுப்போத்தல்களையும் விட்டுச்சென்ற இராணுவத்தினர்..
நேற்றைய தினம் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கலைமகள் மகாவித்தியாலயத்தில் புத்தர் சிலையும் படையினர் குடித்து தீர்த்த மதுப்போத்தல்களும் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது
.பாடசாலை தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்துமே சூறையாடப்பட்டும் பெரும்பாலான கட்டடங்கள் அத்திவாரம் வரை உடைத்தெறியபட்டும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஏற்கனவே பாடசாலையை சூழ படைமுகாம்கள் உள்ளநிலையில் மாணவர்கள் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமாவென்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
