Designed by Iniyas LTD
நாய்களின் வருகையால் குதூகலமான மக்கள்..
ஸ்காட்லாந்து நாட்டின் டோமிச் நகரில் 350க்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர்ஸ் நாய்கள் ஒரே இடத்தில் கூடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நாய் இனங்களில் பலவகை உண்டு. இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, பக் போன வகை நாய்கள் நாம் அறிந்தவையே.
நமக்குத் தெரியாத இன்னும் பல வகை நாய் இனங்கள் உலகம் முழுக்க உள்ளன. இதில் கோல்டன் ரெட்ரீவர்ஸ் என்ற இந்த நாய் இனம், 19ம் நூற்றாண்டில் உருவானதாக சொல்லப்படுகின்றது.
குறிந்த நாய் இனம் உருவாகி தற்போது 150 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்த 150வது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில், கோல்டன் ரெட்ரீவர்ஸ் எனும் இந்த வகை நாய்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டன.
இந்த நிகழ்ச்சியினை கோல்டன் ரெட்ரீவர்ஸ் கிளப் ஒழுங்கமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நாய்களின் வருகையால் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் குதூகலமடைந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
