Designed by Iniyas LTD
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமெரிக்கா பயணமாகிறார்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அமெரிக்கா பயணமாகிறார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் அரையாண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் அமெரிக்கா பயணமாகிறார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 187 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.