தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நியூசிலாந்து நாட்டில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்

1483977_549719915116867_989891535_oழமை போல் இம்முறையும் நியூசிலாந்து மண்ணிலே கார்த்திகை மாதம்  27ம் திகதி புதன்கிழமை , மாலை 6.30 மணியளவில் , Owairaka Primary School, 113-115 Richardson Road, Mt Albert, Auckland மண்டபத்தில் நடைபெற்றது.

மாவீரர் கேப்டன் கண்ணன் அவர்களின் அன்னை திருமதி கணபதிப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து தேசியக் கொடியினை மகளீர் அணியின் பொறுப்பாளர் சுமதி அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை மாவீரர் திலகா அவர்களின் சகோதரன் துறை மாஸ்டர் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் ஆரதனைஅவர்களின் சகோதரர் கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் எழுந்து அகவணக்கம்செலுத்தினர். அதனை தொடர்ந்துமக்கள் அனைவரும் மலர் தூவி தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்துமாவீரர்நாள் அறிக்கையினை குமரன் அவர்கள் வாசித்தார். தொடர்ந்து தேசிய தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள்உரையின் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப்பட்டது. இறுதியாக தமிழீழ எழுச்சிப்பாடல் இசைத்ததை தொடர்ந்துநிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. இந்நிகழ்வில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments
Loading...