தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நியூயோர்க்கில் ஒபாமா- அதிபர் சிறிசேன சந்திப்பு

Obama My3. 01_CIஅமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்துபசாரத்திற்கு இடைநடுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பரக் ஒபாமாவை சந்தித்து கைலாகு செய்து சொற்ப நேரம் பேசியுள்ளார்.

Comments
Loading...