தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிபர் சிறிசேன உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணம்: சமந்தா பவர் புகழாரம்!

samantha_maiththiri_001இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த 10 மாதங்களில் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய வேலைத்திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் அக்கறையும் அவதானித்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா மற்றும் ஆபிரிக்க தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தம்மிடத்தில் வைத்து கொள்ள முயற்சிக்கும் போது, இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை கைவிட எடுத்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது.

அத்துடன் இது உலகில் உள்ள ஏனைய தலைவர்களுக்கு முன்னுதாரணம். நல்லிணக்க வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதில் புதிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் விரிவுப்படுத்திக்கொள்ள முடிந்தால் சிறந்ததாக அமையும்.

அரசாங்கத்தின் புதிய திருத்தங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அரசியல் மறுசீரமைப்புகள் மூலம் பொருளாதார பிரதிபலன்களை பெற்று இலங்கை முன்னேற்ற முடியும் என சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...