Designed by Iniyas LTD
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் இனி திருத்தங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது – வெங்கையா
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவில் இனி திருத்தங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனால் ஏற்படும் விளைவுகளை அரசு எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பலம் மாநிலங்களவையில் அரசுக்கு இல்லையென்றாலும், நிலக்கரி மசோதா, சுரங்கம் மற்றும் தாதுப் பொருட்கள் மசோதா ஆகியவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தன்னிச்சையாக அல்லாமல், விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகே அரசு முடிவுகளை எடுப்பதாகக் கூறிய வெங்கைய்யா நாயுடு, நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் தேவையான பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடு வளர்ச்சி அடைவதையோ, அரசுக்கு நற்பெயர் கிடைப்பதையோ எதிர்க்கட்சிகள் விரும்பாததன் காரணமாகவே இத்தகைய தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.