தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பதற்கான, தொலைபேசி சேவை

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பதற்கான, தொலைபேசி சேவை எண்ணை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இதனை வெளியிட்டார்.phone

பின்னர் பேசிய அவர், இந்த தொலைபேசி சேவை கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்டதுதான் என்றும், தற்போது அது மறுபடியும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மின்சாரம் மற்றும் தண்ணீர் தொடர்பான ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதுபோல, இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊழல் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கில், அன்னா ஹசாரே தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டதையும் அர்விந்த் கெஜ்ரிவால் நினைவு கூர்ந்தார்

Comments
Loading...