தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தம்பி மகன் கைது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், அவரது தம்பி மகன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.thatha

தீவிரவாதிகளுடன் சட்டவிரோத போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது, வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கியது, ஏவுகணை ஏவும் தொழில்நுட்பத்தை விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தாவூத் இப்ராகிமின் தம்பி மகனான சோகைல் கஸ்கர்(36) என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.   சோஹைலுடன் மேலும் 2 பாகிஸ்தானியர்களையும் அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இவர்கள் ஸ்பெயினிலிருந்து அமெரி்க்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதமே கைது செய்யப்பட்ட போதிலும் தற்போதுதான் இவ்விவகாரம் வெளியில் தெரிந்துள்ளது.   அமெரிக்க போலீசாரின் விசாரணையில் கொலம்பியாவில் உள்ள FARC தீவிரவாத குழுவுடன் சோகைல் கஸ்கருக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. சோஹைல் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 25 வருடம் மற்றும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது

Comments
Loading...