Designed by Iniyas LTD
நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத்பொன்சேகா..
இலங்கைன் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு முரணானசில முடிவுகளை நிறைவேற்ற முயற்சித்ததாகவும், எனினும் , உயர்நீதிமன்றம் ஜனாதிபதியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகவும்,
இவ்வாறான நிலையில், அரசமைப்பை மீறி செயற்படுத்திய விடயங்களால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளை ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.