தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவிற்கமைய முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள்   எரித்து அழிக்கப்பட்டுள்ளது

யாழ் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள் இன்று  எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவிற்கமைய  நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டுள்ளது..

275 கிலோ கஞ்சா உட்பட  ,2016ஆம் ஆண்டு முடிவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்கொடுமை உட்பட 15 வழங்குகளின் சான்றுப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது

தீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சா ரூபா  25 லட்சம்  பெறுமதியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம்

இதேவேளை கடந்த நவம்பர் மாதமும் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களோடு, சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவும் எரித்து அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...