Designed by Iniyas LTD
நீதிமன்றில் சரணடைந்துள்ள ஆவா குழுவின் தலைவர்…
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் தலைவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன.
அதோடு குறித்த நபர் மீது நீதிமன்றால் பிடியாணை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாகச் சரண்டைந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் குறித்த நபர் தேடபட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,