Designed by Iniyas LTD
முப்படைகளின் பிரதானி அதிரடி கைது….
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பு படைகளின் பிராதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலையான போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிரானக முன்னதாகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , முக்கிய சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்து, தப்பிச் செல்ல உதவியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.
இந்த நிலையில், அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னியானபோதே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.