தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிமன்று விடுக்காத அறிவித்தலை விடுத்த சுமந்திரன்

சம்பூரில் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் சம்பூர் மக்கள் உண்ணாவிரதத்தை இருந்ததை அடுத்து, குறித்த காணிகள் விடுவிப்பதில் சிக்கல் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சுமந்திரன் கூறி இருந்தார்.Sumanthiran

ஆனால் உண்மையில் அன்றைய வழக்கில் உயர்நீதிமன்றம் அவ்வாறான அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த விசாரணையின் போது ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காணி விடுவிப்புக்கான இடைக்காலத் தடையை நீக்குவதாக உயர் நீதிமன்றம் அறிவிக்காத போதும், அதனை நீடிக்கவும் இல்லை.

 இதனை பயன்படுத்திக் கொண்ட சுமந்திரன், காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்ததாக கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த வழக்கினை தொடர்ந்துள்ள தனியார் நிறுவனம், போலியான அறிவிப்பை சுதந்திரன் வெளியிட்டமை தொடர்பில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தது.  இதனை அடுத்து இந்த குற்றச்சாட்டு உண்மை எனில், சுமந்திரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருமாறு உயர் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது.

Comments
Loading...