Designed by Iniyas LTD
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடிப்பு-

நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் பெருந்திரளான மக்கள் தேவாலயத்திற்கு ஆராதனைக்காக சென்றிருந்தனர்.
மேலும் கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்ற சில விநாடிகளில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.