Designed by Iniyas LTD
பாகிஸ்தான் லாகூர் நகரில் குண்டுவெடிப்பு – நால்வர் பலி…
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயம் அடைந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்க்ளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தற்பொழுது ரம்ஜான் நோன்பு நடைபெறும் நிலையில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற தர்கா அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.