Designed by Iniyas LTD
நுவரெலியாவில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி!
நுவரெலியா, பீட்ரூ லவர்சிலிப் தோட்டத்தில் நான்கு வயது சிறுவனொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று(2) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த டி.சகிர்தன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் கூறினர்.