தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெடுவாசல் போராட்டம்: மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைப்பு

neduvasalமத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்தப் போராட்டத்தில் நெடுவாசலை சுற்றியுள்ள, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களின் விருப்பமின்றி செயல்படுத்தப்படாது என மத்திய, மாநில அரசுகள் தரப்பில் கூறப்பட்டது.

அத்துடன் இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால்தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்குழு இன்று அறிவித்துள்ளது. அதையேற்று நெடுவாசல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் போராட்டக்களம் அருகே அரசு பள்ளியில் பொதுத்தேர்வு நடப்பதாலும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறா விட்டால் 100 மடங்கு வீரியத்துடன் போராட்டம் மீண்டும் தொடங்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Comments
Loading...