தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நைஜிரியா பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி

நைஜிரியாவில் நேற்று பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலியானார்கள். கடந்த 72 மணி நேரத்தில் நைஜிரியாவில் தீவிரவாதிகளால் 118 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு எந்த  இயக்கங்களும் இதற்கு இதுவரை பொறுப்பு ஏற்று கொள்ளவில்லை.bomb

ஆனால் போகோஹாரம் தீவிரவாதிகள்தான் இது பொன்று பொது இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.  நைஜிரியாவின் மக்கல் நெருக்கம் அதிகமுள்ள அடவாமா பகுதியில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் உளபட 40 பேர் பலியானார்கள்.கடந்த 48 மனி நேரத்தில் தெற்கு நைஜிரியாவில் இது 3 வது குண்டுவெடிப்புஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை  2 பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள்  மைடுகுரியில் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் அதிகமானபேர் காயம் அடைந்து உள்ளனர். ஒரு பெண் மார்க்கெட் பகுதியிலும்  மற்றொரு பெண் சட்டமற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்து செல்லும் இடங்களிலும் இநத குண்டு வெடிப்பை நட்த்தினர்.

நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில்  கடந்த 2009 முதல் போகாஹாரம் தீவிரவாதிகள் இத்த்கைய குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments
Loading...