Designed by Iniyas LTD
நோய் எதிர்ப்புசக்தி மிக்க புதிய கோழி ரகம்!
நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த புதிய கோழி ரகத்தை மத்திய பிரதேசத்தில் உள்ள நானாஜி தேஷ்முக் பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது.
நர்மதா நிதி என்ற இந்தக் கோழியினம் புரதச் சத்து மிகுந்தது என்றும் விலை மலிவானது எனவும் அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
கடக்நாத் மற்றும் ஜபல்பூர் கலர் ஆகிய கோழியினங்களை வைத்து இந்த புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற கோழியினங்களை போல இவற்றுக்கு நோய்த் தடுப்பூசி எதுவும் போட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டுக் கோழியினங்கள் வழக்கமாக ஆண்டுக்கு 45 முட்டைகளை மட்டுமே இடும் நிலையில் நர்மதா நிதி கோழிகள் 181 முட்டையிடும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.