Designed by Iniyas LTD
பக்கச்சார்பான திட்டமிட்ட நடவடிக்கை மூலம் தாம் பழிவாங்கப்படுவதாக கூறி குடும்பத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கலம்பவெவ பகுதியில் மகாவலி அதிகார சபையின் பக்கச்சார்பான திட்டமிட்ட நடவடிக்கை மூலம் தாம் பழிவாங்கப்படுவதாக தனது 9 பிள்ளைகள் சகிதம் ஒரு குடும்பத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செதியாள தெரிவித்துள்ளார்.
தாம் கடை ஒன்றை அமைக்க முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தி குறித்த இடத்தை யானை வேலி அமைத்து அபகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுஇயுள்ளனர்.
மேலும் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் இதற்கு தீர்வு இல்லையேல் தாம் போராட்டத்தை கைவிட மாட்டேம் எனவும் தனக்கான நீதி பெற்று தரப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்
அத்தோடு தனக்கு தீர்வு தராது தன்னை பலாத்காரமாக எழுப்ப முயற்ச்சித்தால் தான் மருந்து அருந்தி பிள்ளைகளுக்கும் மருந்தை குடுத்து குடும்பமாக உயிரை மாய்ப்போம் எனவும் அல்லது தீமூட்டி எரிந்து போவோம் என பெற்றோல் மாறும் நஞ்சு மருந்துடன் போராட்டத்தில் குறித்த குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





