தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டொனால்ட் ட்ரம்ப் – விளாடிமிர் புடின் ஜூலை 16இல் சந்திப்பு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பு ஜூலை 16 ம் திகதி பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில்  நடக்க இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்கா-ரஷ்யா என்றாலே எதிரி நாடுகள் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் வரும்.அதற்கு ஏற்றபடிதான் இரு நாடுகளும் தங்களுக்குள்ளான பனிப்போரை மேலும் மேலும் உயர்திக்கொண்டுதான் வருகின்றது.

இதேபோல் முன்னதாக அமெரிக்காவின் மற்றொரு எதிரி நாடக கருதப்படும் வடகொரியாவுடன் சமீபத்தில் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

குறித்த  பேச்சு வார்த்தையின் பின்னரே  வடகொரியா தனது அணு ஆயுதத்தை ஒழிப்பதாக உறுதியளித்தது.

இந்த நிலையில்  தற்போது அமெரிக்கா-ரஷ்யா இடையிலான  பேச்சு வார்த்தையையும் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

இதன் எதிர்பார்ப்பாகத்தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பு  இடம்பெற உள்ளதாக அறிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...