Designed by Iniyas LTD
பங்குத்தந்தை பிரான்சிஸ் சிங்களப்படையினரிடம் சரணடைந்தார்-நேரில் கண்டவர் சாட்சியம்
இறுதிப்போரின் பொது பங்குத்தந்தை பிரான்சிஸ் யோசப் அவர்கள் படையினரிடம் சரணைந்ததனை கண்ட சாட்சி ஒருவர் ஜரோப்பிய நாடு ஒன்றில் சாட்சியளித்துள்ளார். விடுதலைப்புலிகளின் ஆங்கில மொழி கல்லூரியின் விரிவுரையாளராக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் அடிகளார் அவர்களிடம் ஜந்தாவது பிரிவாக 2008 ஆம் ஆண்டு ஆங்கிலம்படித்து பட்டம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கார்த்திகேசு சிவகுமார் என்ற மாணவன் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அரசியல் அமைப்பு மற்றும் மனிதஉரிமைக்கான ஜரோப்பிய மையத்தின்( European Center for Constitutional and Human Rights) ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சாட்சியம் எடுத்துள்ளார்கள்.
கார்த்திகேசு சிவகுமாரின் அண்ணர் ஒருவர் தலைவர்பிரபாகரன் அவர்களின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்து உயிரிழந்த நிலையில் இலங்கையில் இவர் சாட்சியங்களை தெரிவித்து வாழமுடியாத நிலையில் ஜரோப்பிய நாடு ஒன்றில் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார். போரிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிய ஆங்கில மொழிக்கல்லூரியில் பட்டம் பெற்று இறுதிவரை பிரான்சிஸ் யோசப் அடிகளாருடன் பயணித்த மாணவன் ஒருவனாக இவர் காணப்பட்டுள்ளார்.
பிரான்சிஸ் யோசப் அடிகளாரை பாதுகாக்கும் நடவடிக்கையில் இவர் இறுதிவரை முயற்சி எடுத்து படையினரிடம் சரணைடந்த வரையில் கண்ணூடாக கண்டுள்ளார். இறுதிப்போரின் போது மகிந்தராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச காலத்தில் நடந்த இனப்படுகொலை மற்றும்படையினரிடம் பங்குத்தந்தை உள்ளிட்ட போராளிகள் சரணடைந்ததை கண்ணூடாக கண்ட சாட்சியமாக அரசியல் அமைப்பு மற்றும் மனிதஉரிமைக்கான ஜரோப்பிய மையத்திடம் (European Center for Constitutional and Human Rights)விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதி நாட்களில் அன்று படையினரின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுகின்றபோது அன்று இரவு விடுதலைப்புலிகளின் அரசியல் துறை துணைப்பொறுப்பாளராக இருந்த சோ.தங்கன் ஒருதொகுதி போராளிகள் படையினரிடம் சரணடைவதற்கு உதவி புரியுமாறு பங்குத்தந்தை பிரான்சிஸ் யோசப் அடிகளாரிடம் கோரியதற்கு அமைவாக அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து படையினரிடம் ஒருதொகுதி தளபதிகள் போராளிகளை அழைத்துக்கொண்டு வட்டுவாகல் பலம் கழிந்து வயல்வெளியில் படைஅதிகாரியிடம் சரணடைந்துள்ளமையினை நேரடியகண்ட சாட்சியாக இவர் காணப்பட்டுள்ளார்.
குறித்த சாட்சியாளர் ஜேர்மன் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் அவரை இனம் கண்ட அரசியல் மற்றும் மனித உரிமைக்கான ஜரோப்பிய மையம் இது தொடர்பான விரிவான சாட்சியத்தினை பெற்றுள்ளது. அரசியல் அமைப்பு மற்றும் மனிதஉரிமைக்கான ஜரோப்பிய மையம் உலகத்தில் மனித குலத்திற்கு எதிராக நடக்கும் குற்றவாளிகளை இனம்காண்பதும் அந்த குற்றவாளிகளை சர்வதேசரீதியில் தண்டிப்பதும் ஸ்ரீலங்கா படையினர் இறுதிப்போரில் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஜெனீவா அமர்வில் விவாதிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் குறித்த அமைப்புக்களின் துரிதநடவடிக்கை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிர்வரும் காலங்களில் மேலும் சிக்கல்களை கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.