Designed by Iniyas LTD
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை காணியில் இராணுவத்தினர் நினைவுத் தூபி…
ஆனையிறவுப் பகுதியில் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைக்குரிய காணியில் இராணுவத்தினர் நினைவுத் தூபி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட குறிஞ்சாதீவுப் பகுதியில், உப்பளம் அமைப்பதற்கு குறித்த காணியினை தருமாறு பிரதேச செயலகத்தால் கோரப்பட்டிருந்தது.
இந் நிலையில், அவற்றுக்கான அனுமதி நீண்டகால குத்தைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குச் சொந்தமான வாடி. வீடுகள் அமைந்த காணி தற்போதும் இராணுவத்தின் பிடியில் உள்ளது.
குறித்த முன்னைய காலத்தில் நெதர்லாந்து நாட்டவர்கள் அங்கு வீடுகள் அமைத்து வெளிநாட்டு மக்களுக்கு சுற்றலா மையாமாக வைத்திருந்த நிலையில், அவை தற்போது இராணுவத்தின் நினைவுச் சின்னம் உள்ள பகுதியாக உள்ளதாகத் தவிசாளர். தெரிவித்துள்ளார்.
குறித்த காணியினை இராணுவத்தினர் ஒப்படைத்தால் அதனை மீண்டும் ஒல்லாந்தர் பயன்படுத்தியது போன்று ஒரு சுற்றுலா மையமாக பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியில் படையினரின் கடை அமைத்துள்ளதுடன், நடைபாதை வியாபாரிகளும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.