தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பஞ்சாப் மாகாணத்தில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கைது

பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர், அங்குள்ள அரசு அமைப்புகள் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியபோது கைது செய்யப்பட்டனர்.  arrestedwomen

இதுபற்றி பயங்கரவாத தடுப்பு துறை செய்தி தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில், ‘லாகூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி செய்துகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த இயக்கத்தின் 4 பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,600 கிலோ வெடிபொருட்கள், 4 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன’ என்றார்.

இதே போன்று கிலா குஜ்ரன்வாலா மாவட்டத்தில் புலனாய்வுத் துறையினருடன் சேர்ந்து பயங்கரவாத தடுப்பு துறையினர் நடத்திய கூட்டு வேட்டையில், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.  பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இல்லை என அந்த நாட்டு அரசு கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...