Designed by Iniyas LTD
பட்டினிபோரட்டம் நடத்திய கணவன் மனைவி கிளி மருத்துவமனையில் அனுமதி!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவு செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று காலை கணவனும் மனைவியும் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கூறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.