தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பதக்க நாயகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள கேரளா சுற்றுலா தளம்

பிரபல கேரள சுற்றுலா நிறுவனம் இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தந்த சிந்து, சாக்ஷி இருவர்களையும் தங்கள் சுற்றுலா தளத்திற்கு வந்து புத்துணர்ச்சி பெற்று செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பேட்மிண்டன் சார்பில் சிந்து வெள்ளியும், மல்யுத்தத்தில் சாஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்று அசத்தினர்.sinthu

இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த இவர்களுக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அதில் தற்போது கேரளாவை சேர்ந்த பிரபல சுற்றுலா நிறுவனமான Kerala Travel Mart (KTM) இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. Kerala Travel Mart சுற்றுலா சார்பாக சுற்றுலா பங்குதாரர்களின் கூட்டம் KTM 2016 நடைபெற உள்ளது. இதை அந்நிறுவனமும், கேரளா அரசும் இணைந்து வரும் செப்டம்பர் 28-30 ஆம் திகதி வரை நடத்தவுள்ளது.

இந்நிகழ்ச்சியினை சிந்துவும், சாக்ஷி மாலிக்கு தொடங்கி வைக்க வேண்டும் எனவும், இங்கு வரும் இருவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இலவசமாக ஆயுர்வேத முறைகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments
Loading...