Designed by Iniyas LTD
ரொனால்டோவின் புதிய கார்
போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் ரொனோல்டா தனது புதியவகை Bugatti Veyron காரை ஓட்டி வரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை ரியல் மெட்ரிட் தனது இன்ஸ்டராகிராமில் பதிவு செய்துள்ளது. போர்ச்சுகல்அணியை சேர்ந்த கிறிஷ்டியன் ரொனால்டோ யூரோ கோப்பை 2016 வென்றதன் மூலம் தனது விடுமுறையை சிறப்பாக கழித்து வருகிறார்.
அந்த வகையில் உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் Bugatti Veyron என்ற புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 1.7 மில்லியன் பவுண்ட்ஸ் ஆகும். இது 2.6 வினாடிகளில் 62 கி.மீற்றர் சென்றடையும் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதை ரொனோல்டோ வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிகையில் வீடியோ எடுத்துள்ளனர்.
அதை ரியல் மெட்ரிக் கிளப் தனது இன்ஸ்டராகிராமில் பதிவு செய்துள்ளது. இந்த கார் 450 Bugatti Veyron 16.4 மற்றும், இது 255 கி.மீற்றர் வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது.
