Designed by Iniyas LTD
பதவி விலகவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள்…
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நெருக்கடியை கொடுத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் அரசிதழ் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.
அதில் நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரச தலைவரின் திடீர் அறிவிப்பையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், தேர்தல்கள் செயலகத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி அரசமைப்புக்கு முரணாக நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாகவும், அதனால், அரசமைப்புக்கு முரணாக தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் பல தரப்பும் வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறுகின்றன.
எனினும் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும் என்பதை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்வதற்கும் இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளது
நாடாளுமன்றத் தேர்தலை அரசமைப்;புக்கு முரணாக நடத்துமாறு பணிக்கப்பட்டால் அல்லது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் பதவி துறப்பேன் என்று ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன்போது, யாராவது ஒருவர் பதவி துறக்கும் முடிவை எடுத்தாலும், மூன்று உறுப்பினர்களும் பதவியைத் துறப்பது என்று தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.