தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜோர்டானில் 11 பேர் பலி…

ஜோர்டான் நாட்டில் கனமழை  மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக   11 பேர்  உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில்  அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளது.
இந்த கனமழையால் பெட்ரா நகரின் சில பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள வாடி மூசா பாலைவன பகுதிகளில் 4 மீட்டருக்கும் கூடுதலாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளத்தில்  வாகனங்கள் பல மூழ்கியபடி உள்ளன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் , பாலைவன நகரான பெட்ராவில் இருந்து ஏறக்குறைய 4 ஆயிரம் சுற்றுலாவாசிகள் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...