தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பன்னாட்டு பனிச்சிற்பத் திருவிழா சீனாவில் ஆரம்பம்..

சீனாவின் ஹீலாங்ஜியாங்  மாகாணத்தில் உள்ள ஹார்பின் நகரத்தில், 35ஆவது வருடாந்திர உறைபனி மற்றும் பனிச்சிற்பத் திருவிழா, கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

வண்ண, வண்ண விளக்கொளியில் ஜொலிக்கும் பனிச்சிற்பங்களை, பனிக் கட்டிட வடிவங்களை, ஹார்பின் பனி நகரில் திரண்டுள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடியுள்ளனர்.

கடந்த  1983ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பனிச்சிற்பத் திருவிழா முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் நேற்றுத் தொடங்கியுள்ள இந்த, பன்னாட்டு பனிச்சிற்பத் திருவிழா, அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறஉள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...