Designed by Iniyas LTD
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு…
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்ப்பட்ட 20 மாணவர்களுக்கு இன்று துவிச்சக்கர வண்டிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களது,
நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன
இன்று காலை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் வைத்து இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது
முல்லைத்தீவு அமைப்பின் தலைவரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான க விஜிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் முன்னாள் வடமாகாண உறுப்பினர்களான ஆ புவனேஸ்வரன் செ.மயூரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் இ. ரவீந்திரன்,
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தியாகராசா புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க . ஜெனமேஜயந்த் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்
நிகழ்வில் மாணவர்களது பெற்றோர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகலேன பலரும் கலந்துகொண்டனர்