Designed by Iniyas LTD
பரபரப்பில் இலங்கையின் மீயுயர் நிதிமன்றம் …
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இதுவரை இலங்கை உச்சநீதிமன்றில் 17 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
அதில் தேர்தல்கள் திணைக்களத்தில் இருந்தும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்குமாக இருந்தால் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் நிலை உள்ளதுடன் ஜனாதிபதி தனது உத்தரவை திரும்பப் பெறகூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாளை அல்லது பிறிதொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது