தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு மாகாண மக்களிற்கு யாழ்  பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு….

கிழக்கிற்கான உறவுப்பாலம்” எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு ,

நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை யாழ்  பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வழங்கி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக ,

ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களிற்கு  மாணவர்கள் உதவிப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக அனைத்துப் பீட பரீட்சைகள் மத்தியிலும் பல்கலை மாணவர்கள் வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட  மக்களிற்கு உதவிகளை வழங்கியுள்ளமையை ,  பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டிலும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...