Designed by Iniyas LTD
பறக்கும் விமானத்தில் சண்டை போட்ட விமானிகள்.
ஈராக்கில் பறக்கும் விமானத்தில் சாப்பாட்டு தட்டிற்காக சண்டை போட்ட இரு விமானிகளை விமான சேவை நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மாஷாத் நகரில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு 157 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.
இதன்போது துணை விமானி தனது உணவை விமான பணிப்பெண்ணிடம் எடுத்து வர கூறியுள்ளார்.
அதனை விமானி தடுத்தநிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விமானம் பக்தாத் நகரில் தரையிறங்கிய பின்னரும் இரு விமானிகளும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சகம் குறித்த விமானிகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை விமானிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.