தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவில் நிலநடுக்கம்..

இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில்  40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது.

முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்  பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் மற்றும் பின்னர் என சில நிமிடங்களாக நிலஅதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், கடந்த 2004ம் ஆண்டில் 9.1 ரிக்டர் அளவாக ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலையில் ( சுனாமி) சிக்கி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...