Designed by Iniyas LTD
பலாலி மக்களை சந்தித்த சிறீதரன் எம்பி
மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களை இன்று கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது தங்களின் தேவைகள், அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் பா.உறுப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இராணுத்ததால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகப்பட்ட பிரதேசத்தில் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன், கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டும் கிணறுகள் இடித்து அவை கட்டப்பட்ட கற்கள் தோண்டி எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.