Designed by Iniyas LTD
பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை…
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு சுமார் 750 ஏக்கர் காணிகள் போதும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விமானப் படையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ் சென்ற பிரதமர், முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பலாலி விமான நிலையத்தை பிராந்திய நிலையமாக்குவதற்கு இதுவரை காலமும் சுமார் ஆயிரம் ஏக்கர் காணி தேவை என கூறிவந்துள்ள நிலையில்,.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 750 ஏக்கரே போதுமானது என விமானப் படையினர் தெரிவித்துள்னர்.
அவ்வாறு 750 ஏக்கர் காணி போதுமானதாக இருந்தால் விரைவாக பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
