தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊடகவியலாளர்   தாக்கப்பட்டமையை கண்டித்து நாளை யாழில் ஆர்ப்பாட்டம்..

யாழ் கொழும்புத்துறை பகுதியில் ,பிராந்திய ஊடகவியலாளரும் விநியோக முகாமையாளருமான செல்வராசா இராசேந்திரம்  என்பவர் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாத குழுவொன்றினால்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை கண்டிக்கும் முகமாகவும் ,குற்றவாளிகள்  நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ் நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.குறித்த ஆர்ப்பாடத்தினை யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள்  ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இந்த ஆர்ப்பாட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறௌள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்பட அனைத்து தரப்புகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...