தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல்வேறு நகரங்களை தாக்கப்போவதாக ஏமன் அல்கொய்தா அச்சுறுத்தியுள்ளது

பிரான்சின் தலை நகர் பாரீசில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையின் கார்டூனை மறுபிரசுரம் செய்த  பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பத்திரிக்கை அலுவலக தாக்குதலில், 12 பேர் பலியானார்கள். அவர்களில், பத்திரிகை ஆசிரியர் ஸ்டெபானி சார்போனியர், கேலிச்சித்திரம் வரைபவர்களான சாபு, டிக்னஸ், வோலின்ஸ்கி ஆகியோரும், இரண்டு போலீசாரும் அடங்குவர். மேலும் தொடர்ந்து  நடந்த 3 நாட்கள்  தாக்குதலில் பாரீசில் பத்திரிகையாளர்கள் போலீசார் உள்பட  17 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.’al-qaeda

இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டை சேர்ந்த அல்-கொய்த இயக்கம் பொறுப்பு ஏற்று கொண்டது. தற்போது ஏமன் அல் கொய்தா நியூயார்க், லண்டன், வாஷிங்டன் உள்பட பல் வேறு  நகரங்களிலும் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.

அரேபியன் பெனிசுலா அல் கொய்தா யுடியூபில் வெளியிட்டு உள்ள புதிய வீடியோ ஒன்றில் ஏமனின் அல் கொய்தா தலைவர் நசிர் பின் அலில் அல் அன்சி கூறி உள்ளதவது:- பாரீஸ் தாக்குதல் முகம்மது நபியை  அவமதித்ததற்காக  “பழிவாங்கும்” செயல் இந்த இலக்கை தேர்வு செய்து தாக்குதல் நடத்தியது சமூதாயதாருக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் தான். இதே போன்று லண்டன் நியூயார்க்,மற்றும் வாஷிங்டன் நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்டியலில் உள்ளன என எச்சரித்து உள்ளார்.

Comments
Loading...