தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பழைய மாணவர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட கட்டிடம் கோலாகலமாக திறந்துவைப்பு..

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளியவளைகலைமகள் வித்தியாலயம் ஆனது பல்வேறு சாதனைகளை கல்வியிலும் விளையாட்டிலும்நிகழ்ச்சி வருகின்றது .

அந்த வகையில் பல்வேறு வகையிலும் தன்னுடைய திறமைகளைவெளிக்கொண்டுவரும் இந்த பாடசாலையானது பல்வேறு குறைகளுடன் இயங்கி வருகின்றதுயாவரும் அறிந்ததே.

 இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியபோதுமான வகுப்பறைகள் கூட இல்லாத நிலையில் காணப்படும்.  இந்த பாடசாலைக்கு பழையமாணவர்களால் அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாகஇடம்பெற்றது.

குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் புலம் பேர் தேசங்களில் வாழ்கின்றமாணவர்களுடைய நிதி  பங்களிப்பின் ஊடாக வகுப்பறைகளும் பிரதான கலந்துரையாடல்மண்டபமுமாக இரண்டு மாடிகள் கொண்ட கட்டடங்கள்  அமைக்கப்பட்டிருக்கின்றன .

கீழ் மாடிகட்டடம் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது மாடி கட்டிடம் அமைக்கப்பட்டுஅதனுடைய திறப்பு விழா நிகழ்வுகள் நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி சிவமோகன்திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் ,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கட்டிடத்திற்கான பெயர் பலகையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் திரை நீக்கம் செய்துவைத்து கட்டடத்தையும்  நாடாவை வெட்டி திறந்து வைத்து இருந்தனர்.

Comments
Loading...