Designed by Iniyas LTD
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு , சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் எனக் கோரிக்கை…
பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் கொடூர வழக்கு, சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் எனக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரிடம் இருந்த இந்த வழக்குகள் பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, சி.பி.ஐ விசாரணைக்கு பின்னர் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம்,
மற்ற பெண்களை புகார் அளிக்க விடாமல் தடுக்கும் வகையில் அரசாணை இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
