Designed by Iniyas LTD
பஸ்ஸில் கேரளா சென்ற தம்பதியிடம் பல லட்சம் பணம்!
பொள்ளாச்சியில் இருந்து தமிழக அரசு பஸ் கேரளா நோக்கி சென்றது. பஸ் பாலக்காடு மாவட்டம் கூட்டுப்பாதை அருகே சென்ற போது இன்ஸ்பெக்டர் சஜீவ்குமார் தலைமையில் கலால் துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த சிக்கந்தர் (33), அவரது மனைவி ஷாஹூல் ஹமீதும்மா (26) ஆகியோர் கொண்டு சென்ற பேக்கை சோதனையிட்டனர்.
அதில் ஆயிரம் ரூபாய் நோட்டு 22 கட்டுகளும், 500 ரூபாய் நோட்டு, 26 கட்டுகளும் என மொத்தம் 34 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் இருந்தன. இதையடுத்து கலால் துறையினர் அவர்களை பிடித்து விசாரித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும் போது, பிடிபட்ட தம்பதி ஹவாலா கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.