தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் நவாஸ் ஷெரீப்

பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையை நவாஸ் ஷெரீப் அரசு முடுக்கி விட்டுள்ளது.nawaz

கைபர் பகுதியில் உள்ள டிரா பள்ளத்தாக்கு பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 7 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. 21 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலில் மூளையாக செயல்பட்ட உமர் நரே கொல்லப்பட்டு விட்டதாக தனியார் டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

பெஷாவர் அருகேயுள்ள தாரா ஆதம் கேல் பகுதியில் பாதுகாப்பு படைகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இதே போன்று பாதுகாப்பு படையினருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே பெஷாவர் அருகே நடந்த துப்பாக்கி சண்டையில், தலீபான் தளபதிகளில் ஒருவரான சய்யார்கானும், மற்றொரு தீவிரவாதியும் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஷாவர் தாக்குதலுக்கு பிறகு ராணுவம் எடுத்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 152 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...