தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 60 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். கடந்த 3 மாதத்தில் நடந்த 3 வது பெரும் தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தானில் பெஷாவர் ஹயாத்தாபாத் பகுதியில் பிரபல மசூதிகள் உள்ளன. இங்கு வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல இடங்களில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முதலில் 10 பேர் இறந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து பலி எண்ணிக்கை 20 ஐ தாண்டியுள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சிலர் உயிருக்கு போராடிய நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.bomb

3 இடங்களில் அருகருகே தற்கொலை படை தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் கூறுகிறது. கடந்த டிசம்பரில் ராணுவ பள்ளியில் நடந்த தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். தற்போது நடந்துள்ள இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இம்ரான்கான் கண்டனம் ; பாகிஸ்தான் இ தெக்ரீக் அமைப்பு தலைவர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் அளிக்க புறப்பட்ட என்னை போலீசார் தடுத்து விட்டனர் என தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Comments
Loading...