தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான் அணி காலிறுதிக்குள் நுழைந்தது

அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் காலிறுதிக்குள் நுழைந்தது.

உலகக்கின்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த கடைசி சுற்று லீக் ஆட்டம் ஒன்றில் மேற்கிந்திய தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.ireland_pakistan

மற்றொரு ஆட்டத்தில் காலிறுதியை எட்ட அயர்லாந்தை நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணியும், அதே இக்கட்டான நிலையில் அயர்லாந்து அணி, பாகிஸ்தானையும் எதிர்கொண்டது.

நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங் 3 ஓட்டங்களிலும், ஜாய்ஸ் 11 ஓட்டங்களிலும், ஒ பிரையன் 12 ஓட்டங்களிலும் நடையை கட்டினர்.  இதனையடுத்து களமிறங்கிய பால்பிர்னி, வில்லியம்சுடன் கைகோர்த்து விளையாடினார். ஆனால் பால்பிர்னி 18 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அயர்லாந்து அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்டு அபாரமாக விளையாடி, அணிக்கு ஓட்டங்களை சேர்த்தார். அவர் 107 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

இதனால் அயர்லாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை அயர்லாந்து வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணியில் ரியாஸ் 3 விக்கெட்களையும், சோகையில் கான், ரஹத்அலி தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 238 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்த நிலையில் 46.1 ஓவர்களில் 241 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷேசாத், சர்பிராஸ் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்க கொடுத்தனர். ஷேசாத் அரைசதம் (63) கடந்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹரிஸ் சோகையில் (3) ஓட்டமுறையில் வெளியேற்றப்பட்டார். அணித்தலைவர் மிஸ்பா சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஹிட் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

கடைசி வரை அபாரமாக விளையாடிய சர்பிராஸ் சதம் அடித்தார். இவர் 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருடன் உமர் அக்மல் (20) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சதம் விளாசிய சர்பிராஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Comments
Loading...