தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் – இம்ரான் கான்

உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.imran-khan

பாகிஸ்தான் அணி, லீக் ஆட்டத்தில் 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே போல் அயர்லாந்து அணியும் 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.

ஒருவேளை பாகிஸ்தான் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றால் அவுஸ்திரேலியாவுடன் மோத வாய்ப்புள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் இம்ரான்கான் கூறுகையில், காலிறுதி நடக்கும் அடிலெய்டு ஆடுகளம் வேகம் குறைந்தது.

எனவே பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவை இங்கு வீழ்த்துவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. அவுஸ்திரேலியர்கள் சுழற்பந்து வீச்சில் கொஞ்சம் பலவீனமானவர்கள்.

அவுஸ்திரேலியாவை மட்டும் பாகிஸ்தான் வீழ்த்தி விட்டால், அதன் பிறகு பாகிஸ்தான் கிண்ணம் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Comments
Loading...