தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் ரகசியமான முறையில் தங்கவைக்கபப்ட்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஏதிலிகள்…

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஏதிலிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த வெளிநாட்டு ஏதிலிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த ஏதிலிகளே இவ்வாறு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் ஒருதொகை அகதிகள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கும் வெளிநாட்டு அகதிகள் அழைத்து செல்லப்பட்டு இரகசியமான முறையில் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னரே இவ்வாறு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...