தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்வியமைச்சு விசேட வேலைத் திட்டம்..


எதிர்வரும்- 29 ஆம் திகதி நாடாளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படுமெனக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்வியமைச்சு விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக பாதுகாப்புப் பிரதானிகளுக்கு கல்வியமைச்சர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளரால் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலாம் தவணை விடுமுறையைத் தொடர்ந்து இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை(22) மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருந்தது.

இந்நிலையில் ,கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து இந்த வாரம் முழுவதும் கல்வி அமைச்சு பாடசாலை விடுமுறை தினங்களாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...